சினிமாவில் நல்ல கதை அமையட்டும் நானும், பிரசன்னாவும் சேர்ந்து நடிக்கிறோம் என சினேகா தெரிவித்து இருக்கிறார். அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் கணவன்-மனைவியாக நடித்த சினேகா பிரசன்னா, இப்போது நிஜ வாழ்விலும் தம்பதிகளாய் இணைந்துள்ளனர். சமீபத்தில் தான் இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இருவரும் விளம்பர படங்களில் ஒன்றாக இணைந்து நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து இருக்கும் சினேகா, விளம்பர படங்களில் நானும் பிரசன்னாவும் இணைந்து நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. இதை பெருமையாக கருதுகிறோம். இப்படி நடிப்பது எங்களுக்கு ஈஸியாகவும் இருக்கிறது. பொதுவாக நடிப்பில் ஏதேனும் சந்தேகம் வந்தால் மட்டும் பிரசன்னாவிடம் கேட்பேன். மற்றபடி அவரவர் பட விஷயங்களில் யாரும் தலையிட மாட்டோம். இப்போதைக்கு இருவரும் விளம்பர படங்களில் இணைந்து நடிக்கிறோம், எங்கள் இருவருக்கும் ஏற்றபடி நல்ல கதை மட்டும் அமையட்டும் நானும், பிரசன்னாவும் கண்டிப்பாக சேர்ந்து நடிப்போம் என்று கூறியுள்ளார்.
|
Labels: kollywood